கொடுப்பினை

0
392

 

 

இதெற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பா
அதிகம் கேட்டொழிந்த வார்த்தைதான் பலருக்கு

கொடுப்பினை என்பது உண்மையில் என்ன
ஏதோ ஓர் ரகசியம் போலவே இந்தக் கொடுப்பினை இருக்கிறது
என்னைப் பொறுத்தவரை
முயற்சி மட்டுமே இது நாள் வரை கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டிருந்தேன்
ஆனால் கொடுப்பினை என்பது இறைவன் பார்த்துத் தருவது என்றார்கள்
முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும் என்பது மனப்பாடமாயிருந்தும்
நிஜழ்வாழ்வில் ஏன் ஒத்துப்போகவில்லை
இறைவன் எப்போதுமே முயற்சியாளர்களை கைவிடுவதில்லையே
ஆமாம் அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினைதான் வேணும்போலும்
கொடுப்பினை என்பது
ஏமாற்றத்திற்கு நாம் சொல்லிக்கொள்ளும் சால்ஜாப்பா என்ன
சரி இதுவும் கடந்து போகும் என
கைகளைதட்டி தோள்களை குலுக்கி நகர்ந்து விடுவதற்கான ஓர் ஆறுதலா என்ன
கொடுப்பினை எந்த ரூபத்திலும் அரூபத்திலும் இருக்கட்டும்
வேகமாய் ஓடி நடந்து களைத்துப் போய் இருக்கையில் தடுக்கிவிடும் கல்லாக இல்லாமல் விட்டாலே போதும்
கொடுப்பினை என்பது அருளப்படாத நியதியாகவே இருந்து விட்டுப்போகட்டுமே
அதனால் என்ன
எப்போதாகிலும் ஓர்நாள்
முயற்சியும் மெய்வருத்தக் கூலிதரும்
என்ற நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் ஆழமாநம்ப வேண்டும்
அவ்வளவுதானே..?

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments