குறிச்சொல்: காதல் கவிதைகள்
கார்கால மலர்கள்
கார்காலம் மலர்கள்
கார்காலம் மலரே ! கார்காலம் மலரே !
கனிவான மெல்லிய இதழே!
கமுழும் மெல்லிய மலர்களே!
நதிகரையோரத்திலே அழகாய் நீ செவ்விதழ் விரித்து சிரித்திருப்பாய்!
மேனியில் அணியும் இனிய மலரை
முத்துப்போல் தென்படுவாய் உள்ளத்தில்!
விழித்திருக்கும் என்மனதை தேனாக மலர்ந்திடவாய்...
காதல் மொழி
அள்ளி தந்த ❤️தில்
ஏற்றினாய் உள்ளத்தில்
இதழ்களோடு உரசம்பொது
இரசனை கண்ட ❤️மே!
விடியும் வரை கண்ணில்
தென்படும் வரை ஏங்கினேன்!
காதோரம் கலந்து பேசும்
உன் மொழிகள் விண் பறந்ததே!
எட்டி பிடிக்கும் ஆசையல்லவா
உன் மனதில் புலந்ததே
வாழ்க்கையென்னும் மயக்கத்தில் வளமை கண்டதே!
விழிகளோடு விழி நோக்கம் போது
விடையைத் தந்தாய் நீ யல்லவா!
வெளிச்சமோ இருட்டிலோ பளிச்சென்று காணும் தேவதை நீ அல்லவா!
நிலவின் ஒளியாய் முகம்...
நான் ரசித்த வர்ணனை
கண்னில் கண்ட கன்னி நீ
கனவில் வந்த கன்னி தமிழே!
காதலில் விழித்தேன் உன்னை
கண்ணில் கண்டதும் என்னில்!
மலர் போன்ற மங்கை நீயல்லவா
கயல் போன்ற விழிகள் விண்மீனை!
மேனியின் மங்கையின் அழகே
கார்மேக குழல் நின் குந்தலாழகு!
தொல்லுதமிழ் பேசும் மணிமொழி
அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள்
இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள்
அறம்காத்து பொருள் தந்த முத்தமிழவள்
கற்றோருக்குப் பொருள் தந்த சான்றோருக்கு
சலங்கை பொருள் தந்தசிலப்பதிகாரம்
கவி கண்ட கம்பனின் பொண்னல்வா நீ
கவிக்கு அணிகலன் தந்த இலக்கியம்...
நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…
நீ என் இயல்புகளுக்கு
புறமானவள்!
எனது விழிகள் அழுது
கண்ணீர் வடிப்பதில்
உனக்கு அப்படியொரு ஆனந்தம்
எனக்கு
எக்கணத்திலும்
எவ்வகையிலும்
எந்தவொரு நலவும்
நேர்ந்திடக் கூடாதென
தினமும் இறைவனிடம்
பிரார்த்திக்கிறாய்...
உனது முன்னிலையில்
நான் சற்று புன்னகைத்திட்டால்
போதும்
பூகம்பம் நேர்ந்தாற் போல்
ஆடிப்போய் விடுகிறாய்
உனக்கு நானென்றும்
ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய்
உட்கார்ந்திருக்க வேண்டும்
அதில் நீ தினமும்
ஒவ்வொரு...