அன்று ஒரு இராப்பொழுது
வட்ட நிலா
சொட்டச் சொட்ட கொட்டுதம்மா
பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள
அவள் வெள்ளொளியை
பெற்று வரும் நதிமகளே……!
சிற்றிடை மேனியினை
தொட்டுவிட்டாய் வளைவுகளில்
நாதம் சிந்தச் சிந்த
சிதறிக்கொண்டே செல்பவளே….
செந்தமிழே…!
கரை மீதினில் நானொருவள் – உனைக்
காண விளைவதும் நோக்காது
புனல் ஓடி ஓடி
போதல் எல்லாம் -அவன்
ஆழி முகம் தேடித்தானோ
நன்னிலத்து தண் குடமே – நின்
நர்த்தனம் கண்டு
நானலும் நாணத்தில் நாணுதடீ