உன் கண்களின் வேகம்
என் கண்ணின் கருவிழி தாண்டி
குருதிக்குழாயினூடு நுழைந்து
இதயத் துடிப்பை கூட்ட
படபடத்தது என் நெஞ்சம்…
கை கால் பதற….
உதட்டில் பூத்த புன்னகையை
கை கொண்டு மறைக்க
கண்களால் தெறித்தது காதல்….
காட்டி கொடுத்து விட்டாயே
என கண்களை மூடி
சட்டென தலை கவிழ்ந்தேன்…..
கன்னமோரம் ஒரு அடக்கமுடியாத
புன்னகையில் ஓரிரு பற்கள் தெரிந்திருக்கும்…..
ஆம் அவன் உணர்ந்திருப்பான்…
அவன் மீது நான் கொண்ட காதலை….
காதலும் ஓர் வியாதி தான்
நரம்புத்தொகுதியும்
அகஞ்சுரக்கும் தொகுதியும்
இருக்கும் வரை…..
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest