29.2 C
Batticaloa
Saturday, June 20, 2026
முகப்பு கவிதைகள் இடம் தவறி வைக்கப்பட்ட குவளை

இடம் தவறி வைக்கப்பட்ட குவளை

0
62
100164594-50kb-1

அழகிய வண்ணத்துடன் வனையப்பட்ட
ஓர் அபூர்வப் பளிங்குக்
குவளை அது…
அமிர்தத்தை ஏந்துவதும்,
தாகம் தீர்ப்பதும் தான்
அதன் ஆயுள் விதியென எழுதப்பட்டது…

வண்ண ​மலர்வனம் சூழ்ந்த வரவேற்பறையின் நடுவே
மதிப்போடு வீற்றிருக்க வேண்டியது
திசைமாறிப் போன
ஏதோ ஒரு கணத்தில்…

புகை படிந்த சமையலறையின்
இருண்ட மூலைக்குள்
நகர்த்தி வைக்கப்பட்டது…

​அலட்சியக் கரங்களின்
தினசரி கையாளலில்
அதன் மெல்லிய விளிம்புகளில்
விழுந்த கீறல்கள்
யாரிடமும் சொல்லப்படாதவை…
இருந்தும் தனக்குள்ளே தேங்கும்
உப்புக் கடலின் துளிகளை
ஒருபோதும் அது வெளியே கசியவிடுவதில்லை…

​கடமையின் சுழற்சிக்குள்
அழுத்தப்படும் ஒவ்வொரு நொடியிலும் தன்
தனித்துவத்தின் ஒளிர்வை
அது இழக்கவில்லை…

​அதற்கான இடம் இதுவல்ல
என தெரிந்தும்
விழுந்து நொறுங்கிவிடக் கூடாதென
எல்லாச் சுமைகளையும்
தாங்கி தன்னைத்
தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது…

​இருந்தாலும் நம்பிக்கையோடு மினுங்குகிறது
என்றாவது ஒருநாள்…
தன் மதிப்பை உணர்ந்து
அலட்சியக் கையாளுதலை விட்டு அந்தக் கரங்கள்
தன்னை மீட்டெடுத்து
உரிய இடத்தில்
ஏந்திக்காக்கும் என்று
ஆவலோடு காத்திருக்கிறது!

ஹஸீதா அபுசாலி
பொத்துவில்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks