மார்கழி பூவே!

2
1240
IMG-20200610-WA0059

பூக்கள் என்றாலே அழகு
அதிலும் மார்கழி பூக்கள்
பேரழகு – இந்த ரகசியம்
எனக்கு தெரிய வந்தது
ஐந்து வருடங்களின் முன்…


அன்று தோட்டத்தே புதிதாய்
வந்திருந்த பூ அனைவர்
கண்களையும் கவர்ந்திழுக்க
என் கண்களுக்கு மட்டும் தெரியாது
போனது ஏனோ?
நாள் சில கழியவே
கிடைத்தது தரிசனம்
பார்த்த மாத்திரத்தில்
ஷங்கர் பட லவ் கிராபிக்ஸ்
என்னை சுற்றிலும்……

இது கொஞ்சம் அதிகமாக
தோன்றினாலும் உண்மை
அவள் பெயர்…..
வேண்டாம் பொது நலன் கருதி…
ஆனால் புதுமையான பெயர்
அழகோடு சேர்ந்த அறிவு
அவளின் சிறப்பு
அனுதினம் கண் ஜாடைகள்
எம்மை இணைத்தன பல மேடைகள்
முதலில் நட்பானது பின் காதலானது
நாட்கள் நடை போட
நாளும் வளர்ந்தது காதல்
அவ்வப்போது சிறு சண்டைகள்
அடுத்த நொடியே ஒற்றுமைகள்
மகிழ்வான தருணங்கள் அது…

ஆனால் கொரோனா விடுமுறை போல்
பெரிதொரு இடைவெளி வந்தது
அது என்னால் தான்…
மன்னிப்பும் கேட்டேன்
யாவும் கடந்தவளாய் அவள்
எனை மன்னித்தாள் ஒரு நண்பியாக
பலமுறை முயன்றேன் புரிய வைக்க
மாறவில்லை அவள் மனம்
எனக்கு அவள் மேல் இல்லை கோபம்
காரணம் அவள் பாவம் ஏதுமறியாதவள்!

மனதை திருடியவனும் நானே
மனதை காயப்படுத்தியவனும் நானே
மருந்திட முடியா ஆறா காயமாய் அது
எனக்கு வலிக்கிறது இன்றும்…
அதன் பிறகும் நண்பர்களாய் பயணித்தோம்…
பேசினோம்…
சிரித்தோம்….
உப்புச்சப்பின்றிய உரையாடல்களாய் சிலநேரம் அவை…
இப்போது கொஞ்சம் மௌனம்
அவள் பற்றி தகவலேதும் இல்லை
அவ்வப்போது பழைய நினைவுகள் வரவே
கண்கள் வேர்க்கின்றன
பேனாவும் கிறுக்குகின்றது அவள் பெயரை மட்டும்…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வஞ்சிமறவன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Wooow really good bro
Superb