29.2 C
Batticaloa
Thursday, June 18, 2026
முகப்பு கதைகள் அனுபவப் பகிர்வுகள் சிறகுகளின் சிறைவாசம்

சிறகுகளின் சிறைவாசம்

0
57
1001645433

நீ திறந்து வைத்திருப்பது
ஜன்னலை மட்டுமல்ல…
நம் நேசத்தின் கதவுகளையும் தான்!
​பறக்கவிட்டேன் என்று
நீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்…
ஆனால், உன் விரல்
நுனி பிடித்துப் பழகிய எனக்கு
சிறகுகள் இருப்பதே
மறந்து போனதே!

​தனித்துப் பறக்கும்
சுதந்திரத்தை விட,
உன்னோடு சேர்ந்து
மலர்களைப் பார்ப்பதே
என் வாழ்நாள் கனவு…

​என்னை விரட்டுவதில் உனக்கு என்ன இலாபம்?
உன் சுவாசக் காற்று வீசும் திசையன்றி வேறெந்த
திசையிலும் – இந்த
வண்ணத்துப் பூச்சிக்கு
உயிர் வாழத் தெரியாதே!

​சிறகுகள் இருந்தும்
கூட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்…
பறக்கத் தெரியாமல் அல்ல,
உன்னைத் தவிக்க விட்டுப் போக
மனம் இல்லாமல்!
​இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்…
உன் ஜன்னல் கம்பிகளில் நான்
உயிரற்ற ஓவியமாக மாறிப் போவதற்குள்!

ஹஸீதா அபுசாலி
பொத்துவில்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks